பயனரின் பார்வையில்/பயனர் கணக்குகள்

உபுண்டு தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

பயனர் கணக்குகள்

உபுண்டுவில் பயனர்கள் மேலாண்மை

பயனர் மேலாண்மை என்பது கணினியை பாதுகாப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பயனரின் உரிமைகளே அவரின் மேலாண்மையை நிர்ணயிக்கும். கணினியின் பாதுகாப்ப பயனருக்க அளிக்கப்படும் உரிமைகளை பொருத்தே அமைகிறது. எனவே பயனர் கணக்கானது எப்படி உருவாக்கப்படுகிறது, யாரால் உருவாக்கப்படுகிறது, பயனர் குழுமம் எப்படி மேலாண்மையை எளிதாக்குகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.


யார் சூப்பர் யூஸர்(அ) ரூட் பயனர் ?

ரூட் பயனர் தான் கணினின் முதன்மை பயனர் மற்றும் அனைத்து மேலாண்மை அதிகாரங்களையும் கொண்டவர். ஆனால் உபுண்டுவில் ரூட் பயனர் உள்நுழைதலை தடை மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. மற்ற படி ரூட் பயனர் கணக்கு நீக்கப்படவில்லை, சரி எப்படி ரூட் பயனர் உள்நுழையாமலே மேலாண்மை பணிகளை மேற்கொள்வது என கேட்கலாம்?. அதில் தான் உபுண்டு தனி பங்கு வகிக்கிறது.