காஞ்சி லினக்ஸ் பயனர் குழு நடத்தும் உபுண்டு 9.10 - கருமிக் கோவாலா வெளியீட்டு விழா

வரும் ஞாயிற்றுக்கிழமை - 29.11.09 அன்று காஞ்சிபுரம், பூக்கடை சத்திரம், P.T.V.S. (ஆங்கில வழி) உயர்நிலை பள்ளியில் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை உபண்டு 9.10 வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவை காஞ்சி லினக்ஸ் பயனர் குழுமம் ஏற்று நடத்துகிறது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னையின் உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இவ்விழாவின் முக்கிய குறிக்கோளாக கட்டற்ற மென்பொருள் பற்றியும் அதன் சிறப்பம்சம் பற்றியும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்படும்.

நிகழ்வுகள் :-

* லினக்ஸ் வரலாறு மற்றும் கட்டட்ற்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வு உரை

* உபண்டு 9.10 இயங்குதளம் மற்றும் அதன் அதீத வளர்ச்சி பற்றிய உரை

*ஒளி படத்திரையை உபயோகப்படுத்தி உபண்டு வரைகலை (Compiz) பற்றிய காட்சி

*இந்நிகழ்ச்சியின் நிறைவாக கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி அளித்தல்.

மேலும் இந்நிகழ்ச்சியில் உபண்டு 9.10 இயங்கு தள குறுந்தகட்டினை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.