கேடீயீ தமிழாக்கப் பயிற்சி பட்டறை

குனு லினக்ஸ் இயங்குதளங்களின் இடைமுகப்புகளில் கேடீயீக்கென்று தனியிடம் உள்ளது. அத்தகைய கேடீயீ தனை தமிழாக்கிட வேண்டி பயிற்சிப் பட்டறை ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை, என் ஆர் சி பாஸ் வளாகத்தில் நடத்த உள்ளோம். பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள தாங்கள் கேடீயீ பயன்படுத்துபவராக, பயன்படுத்த விருப்பம் உள்ளவராக இருத்தல் நல்லது.

இடம்:

என் ஆர் சி பாஸ்,
ஏயு-கேபிசி ஆராய்ச்சி மையம்,
எம் ஐ டி வளாகம்,
குரோம்பேட்டை,
சென்னை.

தேதி: 28/06/2009

நேரம்: காலை 10.30

கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு - திருக்கோணமலை

கடந்த மார்ச் மாதம் 28ம் நாள் இலங்கை - திருக்கோணமலை லியோ கழகத்தினதும் (Leo club of Trinco new city) MIC Computers நிறுவனத்தினதும் அனுசரணையில் கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் கட்டற்ற மென்பொருள் தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இக்கருந்தரங்கில் இறுதிவரை ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். கருத்தரங்கின் முன்பாதியில் பெரும்பாலும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் தொடர்பான சித்தாந்த ரீதியான அறிமுகங்களும் விளக்கங்களும் இடம்பெற்றன. கவனம் சிதறாமல் இவ்விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்து கேள்வி நேரத்தில் தத்துவம் சார்ந்த பல கேள்விகளையும் கேட்கத்தொடங்கினார்கள்.

விடியலை நோக்கி வேலூர்...

வேலூர் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் சார்பாக அதன் உறுப்பினர்களுக்கும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த பொதுமக்களுக்காகவும் 22-12-2008 ஞாயிற்றுக்கிழமை உபுண்டு அறிமுக நிகழ்ச்சி ஓட்டல் ஆவனா இன் தனில் நடைபெற்றது. வேலூர், ஆரணி என அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாற்பதிற்கும் மேற்பட்ட கணினி விற்பனையாளர்கள், தொழில் சார்ந்த தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குவோர் என பலதரப்பு மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

உதகையில் உதயமான உபுண்டு...

உதகை - நவம்பர் 28. கம்ப்யூட்டர் வோர்ல்டு, உதகை சார்பில் உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், கணினி விற்பனையாளர்கள், கனேடியர் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கலந்து கொண்டோருக்கு உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் பொதிகள் பராமரிப்பு, வைன் பயன்படுத்தி விண்டோஸ் மென்பொருள் நிறுவும் முறை, இணைய வசதிகள் போன்ற விடயங்கள் செய்முறையாக விளக்கப்பட்டன.

இந்திரிபிட் ஐபக்ஸ் - வெளியீட்டுக் குறிப்பு தமிழாக்க உதவி

இந்திரிபிட் ஐபக்ஸ் வெளியீட்டுக் குறிப்பினை தமிழாக்கம் செய்வதில் உதவி தேவைப்படுகிறது. தங்களால் உதவ இயலுமாயின் amachu AT ubuntu DOT com முகவரிக்கு விரைந்து மடல் இயற்றவும்.

உபுண்டு ஆசான் திட்டம்

வரும் டிசம்பர் மாதம் தொடங்கி உபுண்டு தமிழ் குழுமம் “உபுண்டு ஆசான் திட்டம்”
எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த விழைகிறது. இதன்படி உபுண்டு தமிழ்
குழுமத்தை சேர்ந்த ஆசான்கள் தமிழகம் நெடுகிலும் பயணித்து
உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்டு குனு லினக்ஸ் சார்ந்த
பாடங்களை பலதரப்பட்ட மக்களுக்கு புகட்டுவர்.

முதற்கண் இரண்டு விதமான பாடங்களை உபுண்டு தமிழ் குழுமம் வழங்க விரும்புகிறது…

1) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் குனு/ லினக்ஸ்
பயிற்சி வகுப்பு - ஆசிரிய/ மாணவர்களுக்கானது
2) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாள் குனு/ லினக்ஸ் பயிற்சி
வகுப்பு - அலுவலர்/ பொதுவானது

இந்திரிபிட் ஐபக்ஸ் - வெளியீட்டு விழா

உபுண்டுவின் அடுத்த வெளியீடு இந்திரிபிட் ஐபக்ஸ் வெளிவர இன்னும் பதினாறு நாட்களே உள்ளன. முந்தைய வெளியீடுகளின் போது எளிய வெளியீட்டு நிகழச்சிகளை நடத்தியது போலவே இம்முறையும் வெளியீட்டு நிகழ்ச்சியொன்றை உபுண்டு தமிழ் குழுமம் நடத்த உள்ளது. நவம்பர் ஒன்று அதற்குரிய நாளாக கருதுகிறோம்.

சிறிய மாற்றமாக எப்போதும் சென்னையிலேயே இதனைச் செய்து வந்த நாங்கள் இம்முறை சென்னையைத் தாண்டி கொண்டாட வேண்டும் எனக் கருதுகிறோம். தாங்கள் வசிக்கும் ஊரில் இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இயலுமாயின் அதனை வரவேற்கிறோம்.

கோளரங்கம் கட்டுரைகள்

Syndicate உள்ளடக்கம்