உபுண்டு கோளரங்கம்

உபுண்டு தமிழ் குழுமத்தின் வலைப் பதிவர்களிடமிருந்து...

இவ்விடத்தே கொடுக்கப் பட்டுள்ள கருத்துக்கள் உபுண்டு, கனோனிகல் மற்றும் உபுண்டு தமிழ் குழுமத்தினுடையவை அல்ல. இத்தளத்தின் செய்தியோடைக்கான ஊற்று: http://www.ubuntu-tam.org/planet/rss20.xml

September 03, 2008

ஆமாச்சு's face
ஆமாச்சு

விடுதலைக்கு வயது 25

கட்டற்ற மென்பொருளின் இன்றியமையாமையை வலியுறுத்தி 1984 ஆம் வருடம் துவக்கப்பெற்ற குனு திட்டம் தமது இருபத்து ஐந்தாம் வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.

இது பற்றிய ஆங்கில நடிகர், நகைச்சுவையாளர், நாவலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்டீபன் பிரை என்பவரது சலனப்படம் கிடைக்கப்பெறுகிறது.

இது பற்றிய குனுவின் செய்தியறிக்கை - http://www.fsf.org/news/freedom-fry/ முகவரியில் வாசிக்கக் கிடைக்கிறது.

பி.கு: இந்நேரத்தில் ரிச்சர்ட் ஸ்டால்மெனின் கட்டுரைகளைத் தமிழில் பதிப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். வரும் செப்டம்பர் இருபதாம் தேதி மென்விடுதலை நாளில் இந்நிகழ்ச்சி அரங்கேரலாம்.

– கணிமொழியிலிருந்து

Share/Save/Bookmark